நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கடற்படையைச் சேர்ந்த 906 பேரும் வைத்திய சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்துள்ளனர்.

முன்னாதகவே 903 கடற்படை வீரர்கள் குணமடைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் இரணவில சிகிச்சை நிலையத்தில் மீதமிருந்த மூன்று கடற்படை வீரர்களும் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஆறு புதிய கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர். இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,730 ஆக உயர்வடைந்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய ஐவரும், கந்தகாடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்புகளை பேணி நபர் ஒருவரும் இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் நேற்றைய தினம் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,041 ஆக பதிவாகியுள்ளது.