நுகேகொட பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி, ஒரு இராணுவ வீரரை கொல‍ை செய்தும், மேலும் இருவரை காயமடையச் செய்த பஸ்ஸின் சாரதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவரை ஜூலை 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நுகேகொட மேம்பாலத்தில், நேற்று காலை கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்றை முந்திச்செல்ல முற்பட்ட மற்றுமொரு பஸ் எதிரே வந்த இராணுவ கெப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இராணுவ கெப் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் விபத்தினை ஏற்படுத்திய பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.