பொலிஸ் ஊடகப்பிரிவிற்கு பதிலாக புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவின் தலைமை அதிகாரிகளாக பிரதி பொலிஸ் மா அதிபர்களான அஜித் ரோஹண மற்றும் பிரியந்த ஜயகொடி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 2 ஆம் திகதி பொலிஸ் ஊடகப்பிரிவு பொலிஸ் மா அதிபரால் இடைநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.