யாழ். பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குருபரன் இராணுவத்தினரின் அழுத்தங்களுக்கு அடிபணியாது தனது பதவியை இராஜினாமாச் செய்தமையை வரவேற்பதாக தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வரை இந்த விடையத்தில் பல்கலைக்கழக சமூகம் கண்டும் காணாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமிழ் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டது  – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | CTR24

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சட்டவிரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும் இன்னல்களுக்கும் கொடூரமான தாக்குதல்களுக்கும் எதிராகக் குரல் கொடுத்து வந்தார். இராணுவத்தினர் செய்த அட்டூழியங்களுக்கு எதிராக அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் போது எவ்வித தயக்கமும் இன்றி முன்னின்று செயற்பட்டு வந்தவர் இவரது இந்தச் செயற்பாடுகளை பொறுத்துக்கொள்ளமுடியாத இராணுவமும் இனவாதிகளும் அவருக்கு எதிராக பல காய்நகர்த்தல்களை முன்னெடுத்தனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலேயே யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளராக கடமையாற்றிக்கொண்டு நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக முடியாது என முட்டுக்கட்டை போட்டனர். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இராணுவத்தரப்பு பல அழுத்தங்களைுயம் பிரயோகித்தன அதன் தொடர்ச்சி தற்போதைய கோத்தாபயவின் கொடூர ஆட்சியிலும் தொடர்கின்றது.

சட்ட விரிவுரையாளராக கடமையாற்றிய குருபரன் மீதான அடக்குமுறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை முடக்குவதற்கு இனவாதிகளால் எடுக்கப்பட்டிருக்கும் முதலாவது முயற்சியே இருவாகும்.

தற்போது நாட்டில் இராணுவ மயம் தலைவிரித்தாடுகின்றது இவ்வாறான நிலையில் யாழ்.பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் எடுத்த முடிவு வரவேற்கத்தக்க விடையம். அரசின் இனவாத கெடுபிடிகளுக்கு அரசாங்கத்திற்கு எதிராக சட்டரீதியான செயற்பாடுகளை அவர் இன்னும் தீவிரப்படுத்தவேண்டும். இதேவேளை பல்கலைக்கழகச் சமூகம் இன்று வரை இது தொடர்பில் அக்கறையில்லாது இருப்பது வருத்தமளிக்கின்றது என்றார்.