மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கை ஒன்று வவுனியா புளியங்குளம் விஷேட அதிரடி படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்றைய தினம் காலை 6 மணியளவில் முள்ளிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலிற்கமைய அப்பகுதிக்குச் சென்ற வவுனியா புளியங்குளம் விஷேட அதிரடிபடையினர் வாகனம் ஒன்றில் கடத்திச்செல்லப்பட்ட 13 முதிரை மரக்குற்றிகளை மீட்டுள்ளதுடன், அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கப் ரக வாகனத்தினையும் கைப்பற்றினர்.
எனினும் வாகனத்தின் சாரதி தப்பிச்சென்றுள்ள நிலையில் அதன் உரிமையாளர் தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் வாகனம் என்பன நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக வவுனியா மாவட்ட வனவள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM