2 ஆம் புவனேகுபாகு மன்னனின் அரச மண்டபம் உடைக்கப்பட்டமை திட்டமிட்ட செயல் - ஓமல்பே சோபித தேரர் 

Published By: R. Kalaichelvan

20 Jul, 2020 | 05:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின்  வரலாற்று சிறப்பு மிக்க மரபுரிமைகள் திட்மிட்டவகையில் அழிக்கப்படுகின்றன. தொல்பொருள்  திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும். இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஆராய குழு நியமித்துள்ளமை காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

நாரஹேன்பிடியவில் உள்ள ராமான்ய நிகாய தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தொல்பொருள் மரபுரிமைகளை சேதப்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை  அனைத்து தரப்பினருக்கும் பொதுவானதாக உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

2016ம்  ஆண்டு சீகிரிய சுவற்றில் கீறிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த தமிழ் யுவதிக்கு 2 வருட கால சிறைதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 13ம் இராசாதானிக்கு சொந்தமான இரண்டாம் புவனேகுபாகு மன்னனின் அரச மண்டபம் உடைக்கபபட்டமை தொடர்பில் இதுவரையில் எவ்வித உரிய நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

அரச மண்டபம் உடைக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கலாசச்சார அலுவல்கள் அமைச்சு பிரதமரின்  பொறுப்பில் உள்ளது.  

ஆகவே குழுவின் தீர்மானங்கள் எந்தளவிற்கு சுயாதீனமாக இருக்கும் என்பதை கருத முடியாது. இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க தொல்பொருள் மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. ஆகவே  தொல்பொருள் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும்.

குருநாகலை  நகர பிதா இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடும் கருத்துக்கள் தொல்பொருள் மரபுரிமைகளை அவமதிப்பதாக உள்ளது.

அரச மண்டபத்தில் தோற்றங்கள்  13ம் நூற்றாண்டினை பறைசாற்றுவதாக உள்ளது என்பதை  எளிமையாக தெரிந்துக் கொள்ளலாம். அரச மண்டபம்  கடந்த 15ம் திகதி இரவு சேதமாகக்ப்பட்டது.

ஆனால் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. ஜனாதிபதிஇ பிரதமர் பொறுப்புடன் இவ்விடயத்தில் செயற்பட வேண்டும்.தொல்பொருள்  மரபுரிமைகள் திட்டமிட்ட  வகையில் அழிக்கப்படுகின்றமை தொடர்பில்  பலமுறை  எடுத்துரைத்துள்ளோம். இவ்விடயத்தில் அரசியல்வாதிகள்  சுயநல போக்குடன் செயற்பட கூடாது.

பௌத்த மரபுரிமைகள் அடிப்படைவாதிகளினால் ஒருபுறம் அழிக்கப்படுகிறது. மறுபுறம் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினாலும் அழிக்கப்படுகிறது. இந்நிலைமை தொடர்ந்தால்  பௌத்தத்தின் தொன்மை  மலினப்படுத்தப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரவின் கொழும்பில்...

2024-10-14 00:14:51
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19
news-image

மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-10-13 18:59:29
news-image

கடும் மழை காரணமாக கட்டான பிரதேச...

2024-10-13 19:00:52
news-image

நாங்கள் வாக்கு கேட்பது மற்றவர்களை போல...

2024-10-13 19:02:11