மரம் முறிந்து விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு ; வவுனியாவில் சோகம்

Published By: Digital Desk 4

20 Jul, 2020 | 05:27 PM
image

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலடி பகுதியில் வேப்பமரம் முறிந்து வீழ்ந்ததில், ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் அவரது உறவினர் ஒருவருடன் அயல்வீட்டிற்கு சென்றுவிட்டு  வீடுநோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

இதன்போது வீசிய பலத்த காற்றில் வீதிக்கரையில் இருந்த வேப்பமரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் குறித்த குழந்தை மற்றும் ஏனைய சிறுவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு  நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் காயமடைந்திருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் ஆயிலடி பகுதியை சேர்ந்த மதுசன் லக்சாயினி என்ற ஒன்றரை வயது குழந்தை மரணமடைந்துள்ளதுடன், ஜீவிதா(10), சர்மிலாதேவி(8) ஆகிய சிறுமிகள் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியாவில் இன்றையதினம் மதியம் அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்று வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்: ஒரு ஏக்கர்...

2026-03-16 14:13:58
news-image

சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்தினால் கிவ்.ஆர் முறைமை...

2026-03-16 14:40:34
news-image

அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழலை...

2026-03-16 13:51:53
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-16 14:16:20
news-image

நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

2026-03-16 13:38:22
news-image

ஊழல் குற்றச்சாட்டு: சஜின் வாஸ் குணவர்தனவுக்கு...

2026-03-16 14:11:42
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணத் தொகுதி ஒன்று...

2026-03-16 14:14:40
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு...

2026-03-16 12:28:59
news-image

சித்திரை புத்தாண்டு: சர்ச்சை முடிவுக்கு வந்தது;...

2026-03-16 12:59:01
news-image

நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்...

2026-03-16 12:53:47
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் :...

2026-03-16 12:34:37
news-image

போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்; பொதுமக்களுக்கு...

2026-03-16 12:32:45