அனுராதபுரம் - புத்தளம் மாரகஹாவெவ பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை மோதி தப்பிச்சென்ற வாகனம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வாகனம் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

இன்று (07) அதிகாலை குறித்த சாரதி முச்சக்கரவண்டியை பாதையோரத்தில் நிறத்திவிட்டு பாதையை கடக்க முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 37 வயதான ராஜாங்கனை, யாய பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். 

குறித்த வாகனம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.