கணவரின் பாதையிலேயே எனது பயணமும் இருக்கும்  - சசிகலா ரவிராஜ்

Published By: Digital Desk 4

20 Jul, 2020 | 05:15 PM
image

தமிழ்த்தேசியத்தின் கொள்கையில் பயணித்து பெண்களின் வாழ்வாதாரம் அடிப்படைத் தேவைகளை தீர்ப்பதே எனதுநோக்கம் எனத் தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கணவரின் பாதையிலேயே எனது பயணமும் இருக்கும் எனத் தெரிவித்தார்.

யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்இதனைத் தெரவித்தார்.

இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் நெருங்கிவரும் வேளையில் எமது பிரச்சார நடவடிக்கைகளும் சந்திப்புக்களும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன பல்வேறு சவால்கள் நிறைந்துள்ள நிலையிலும் கணவன் விட்டுச் சென்றப் பாதையில் பயணிக்கின்றபோது மக்களின் ஆதரவு இருப்பதை நான் உணர்கின்றேன்.

பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்கின்ற போது கனத்த மனமாகவே உள்ளது. இம்மக்களை சந்திக்கின்றபோது எங்களை புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே தாங்கள் இருப்பதாகவும் கூறுகின்றார்கள்.

அடிப்படை வசதிகள் பொருளாதார வசதிகள் இல்லாத நிலையில் ஒரு அச்சமான அவலமான நிலைக்குள் வாழ்கின்றார்கள் என்பதையே கூறுகின்றார்கள்.அவர்களின் இந்த நிலைமையை நானும் அனுபவிக்கும் ஒருவராகவே இருக்கின்றேன். 

இத்தத் தேர்தலின் பின்னர் எனக்குக் கிடைக்கின்ற அத்தனை சந்தர்ப்பங்களும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவே எனது முயற்சிகள் இருக்கும் அது மட்டுமன்றி கட்சித் தலைமையுடன் உரையாடி அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டியதே எனது கடமையாக இருக்கின்றது.

மக்களைச் சந்திக்கின்ற போதெல்லாம் எனது கணவரையும் அவர் செய்த வேலைத்திட்டங்களை நினைவு கூருகின்றார்கள் அது மட்டுமன்றி எனக்கான ஆதரவு தருவோம் எனக்கூறியுள்ளார். தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைப் பொறுத்தவரையில் ஒரு சிலருக்கு இடையில் சில முரண்பாடுகள் காணப்பட்டாலும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து எனக்கான ஆதரவை தெரிவிக்கின்றார்.

எனினும் ஒரு மகளிர் அணியாக  ஒரு ஆதரவை வெளிப்படுத்தாத நிலை காணப்படுகின்றது. எனினும் அடுத்துவரும் காலங்களில் இதற்கான ஆதரவுக்களம் வரும் என்பதை எதிர்பார்க்கின்றேன். 

வேட்பாளர்களுக்கு இடையிலும் கட்சியின்தலைவரும் முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜாவைத் தவிர்த்து ஏனையவர்களின் ஆதரவு என்பது குறைவாகவே உள்ளது. எனினும் அடுத்துவரும் நாட்களில் அனைத்து வேட்பாளர்களின் ஆதரவு இருக்கும் என நம்புகின்றேன். 

எவ்வாறு இருப்பினும் எங்களுடைய நம்பிக்கையில் நான் மக்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று வருகின்றேன்.  தமிழ்த்தேசியத்தின் நிலைப்பாட்டில் தான் எனது செயற்பாடுகளும் இருக்கும் எனது கணவர் எவ்வாறு தமிழ்த் தேசியத்துடன் செயற்பட்டாரே அந்த வழியில்தான் நானும் செல்வேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள்...

2024-04-12 21:41:41
news-image

ஞானசாரருக்கு நாளை விடுதலை இல்லை!

2024-04-12 21:00:04
news-image

புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பலி...

2024-04-12 18:49:17
news-image

அண்ணனின் தாக்குதலில் தம்பி உயிரிழப்பு :...

2024-04-12 18:36:53
news-image

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2024-04-12 18:22:35
news-image

இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் 200 கிலோ...

2024-04-12 17:53:23
news-image

கொவிட் தொற்றினால் குருணாகல் வைத்தியசாலையில் ஒருவர்...

2024-04-12 17:36:50
news-image

இலங்கையுடனான பாதுகாப்பு இராஜதந்திரத்தை தீவிரப்படுத்தும் இந்தியா...

2024-04-12 09:10:18
news-image

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய...

2024-04-12 16:57:02
news-image

யாழில் இடம்பெற்ற விபத்தில் தொழில் வழிகாட்டல்...

2024-04-12 16:50:32
news-image

ஜூலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு -...

2024-04-12 08:58:25
news-image

'சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு புத்தாண்டு'  -...

2024-04-12 08:51:18