பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கெறி சைமண்ட்ஸ் ஆகியோர் தங்களது மகன் வில்பிரெட்டின் இரண்டாவது புகைப்படத்தை நேற்று வெளியிட்டு, அவரை கவனித்துக்கொண்ட வைத்தியசாலை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
குறித்த புகைப்படத்தில்,மூன்று மாதங்களான வில்பிரெட் அவரது அப்பாவைப் போலவே இளஞ்சிவப்பு முடியுடன் காணப்பட்டார்.
தம்பதியினர் தங்கள் மகனின் தனியுரிமையைப் பாதுகாக்க ஆர்வமாக இருந்தாலும், அவரது தலையின் பின்புறத்தின் புதிய படம் அவர் நிச்சயமாக தனது தந்தையை போன்ற தோற்றம் பெற்றிருப்பதை உறுதிப்படுத்துகிறது.
ஏப்ரல் மாதம் பிறந்தபோது, லண்டன் பல்கலைக்கழக கல்லூரி வைத்தியசாலையில் புதிய அம்மாவையும் குழந்தையையும் கவனித்த வைத்தியசாலை ஊழியர்களுடன் ஜூம் காணொளி அழைப்பின் போது இந்த ஜோடி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையுடன் (24) ஜோன்சன் பிரதமராக நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவை முன்னிட்டு நேற்று இரவு டவுனிங் தெருவில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டது.
தம்பதியரின் நண்பர் ஒருவர் சைமண்ட்ஸ் தாதியருக்கு வைத்தியசாலையில் பெற்ற "மிகவும் நம்பமுடியாத கவனிப்புக்கு" எவ்வளவு நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவள் என்று கூறினார்.
"நாள்தோறும் அவர்கள் செய்யும் அற்புதமான வேலைக்கு" அவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், குட்டி வில்பிரட் எவ்வளவு வளர்ந்துள்ளார் என்பதைக் காட்ட அவர் தொடர்பு கொள்ள விரும்புவதாகக் கூறினார். கொவிட் -19 நெருக்கடியை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதைக் கேட்டு ஜோன்சன் கலந்துரையாடலில் சேர்ந்தார்.
ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றுடன் போராடிய பின்னர் தீவிர சிகிச்சையிலிருந்து குணமடைந்த சில நாட்களில் குழந்தை பிறந்தது. பிரதமர் லண்டனில் உள்ள சென் தோமஸ் வைத்தியசாலையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்றார்.
கொரோனா பாதிப்பால், போரிஸ் ஜோன்சன் வைத்தியசாலையில் இருந்தபோது தீவிர சிகிச்சை அளித்து வந்த இரு வைத்தியர்களான நிக் பிரைஸ் மற்றும் நிக் ஹார்ட் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விதமாக நிக்கோலஸ் என்ற பெயரை சேர்த்து 'வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜோன்சன்' என தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM