சஜித், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பம்: நவீன் திஸாநாயக்க

Published By: J.G.Stephan

20 Jul, 2020 | 02:46 PM
image

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும். அந்த கட்சிக்கென கொள்கைகள் கிடையாது. என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொத்மலை நவதிஸ்பன பகுதியில் இன்று 20.07.2020 இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

" ஐக்கிய தேசியக்கட்சிக்கென ஒரு கட்டமைப்பு இருக்கின்றது. அது எமது கலாச்சாரம், மதம். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியென்பது, அதிக  தலைவர்கள் உள்ள கட்சியாகும். சஜித்தை தலைவர் என்கின்றனர். மேலும் சிலர் சம்பிக்க தலைவர் என்கின்றனர். ஆனால், உறுதியான தலைவர் ஒருவர் இல்லாத கட்சியாகும்.

எனது தந்தை ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறியபோது புதிய கட்சியொன்றை உருவாக்கினார். ஆனால், சஜித் அணியினர் கட்சியொன்றை வாடகைக்கு வாங்கியுள்ளனர். அந்த கட்சிக்கு கொள்கை இல்லை, இரண்டாம் தலைமைத்துவமும் இல்லை.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பல கட்சிகள் உருவாகலாம். அவற்றுக்கு ஆயுள் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்கமுடியாது. 50களில் பண்டார நாயக்க வெளியேறினார். சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கை சின்னம் இருந்தது. அதன் பின்னர் கதிரை, வெற்றிலை என இன்று மொட்டு சின்னத்தில் வந்து நிற்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இதே நிலைமையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23
news-image

மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-18 11:15:47
news-image

கடலில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம்...

2025-01-18 10:48:36
news-image

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய...

2025-01-18 10:27:43
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-01-18 10:17:40