கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் ஹஜ் யாத்திரிகைக்கு தயார் நிலையில் உள்ளதாக சவுதி அரேபியா உள்துறை அமைச்சகம் அறிவித்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த படைகள் தயாராக இருப்பதாக ஹஜ் பாதுகாப்புப் படைகளின் தளபதி சயீத் அல் துவாய்லான் ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

160 நாடுகளின் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு வருடாந்த யாத்திரையில் பங்கேற்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

"யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்காக கொரோனா வைரஸை சமாளிக்க நடவடிக்கைகளைக் கொண்ட ஒரு அசாதாரண பருவமாகும்" என்று அல் துவாய்லன் கூறியுள்ளார்.

சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிரான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் குறித்து தளபதி எச்சரித்தார், சவுதி அரேபியர்கள் அல்லாதவர்கள் நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்ள நேரிடும்.

ஞாயிற்றுக்கிழமை, சவுதி சுகாதார அமைச்சகம் 2,504 புதிய கொரோனா வைரஸ் நோயாளர்களை அறிவித்தது, இது நாட்டின் மொத்த எண்ணிக்கையை 250,920 ஆக உயர்த்தியுள்ளது.

3,517 நோயாளிகள் குணமடைந்ததை தொடர்ந்து குணமடைந்த மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 197,735 ஆக உயர்ந்ததுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 2,486 ஆக அதிகரித்துள்ளது.

2014 மற்றும் 2016 க்கு இடையில், கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் பல ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் விசுவாசிகள் எபோலா காரணமாக ஹஜ்ஜிலிருந்து விலக்கப்பட்டனர்.

ஹஜ் ஒரு முக்கியமான வருமான ஆதாரத்தை பிரதிபலிக்கிறது. பொதுவாக உள்ளூர் பொருளாதாரத்திற்கு 5.3 பில்லியன் டொலர் முதல் 6.9 பில்லியன் டொலர் வரை சம்பாதிக்கிறது என்று மக்காவின் சேம்பர் ஒப் காமர்ஸ் தெரிவித்துள்ளது.

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 2.5 மில்லியன் முஸ்லிம்கள் 6,00,000 க்கும் மேற்பட்ட சவுதி பிரஜைகள் உட்பட ஹஜ் யாத்திரையில் பங்கேற்றனர்.

வருடாந்த யாத்திரை இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும், ஒவ்வொரு முஸ்லிமும் தனது உடல் மற்றும் பொருளாதார நிலை அனுமதித்தால் குறைந்தபட்சம் ஒரு முறையாவது செய்ய வேண்டும்.