சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களை இருவேறு இடங்களில் இலங்கை கடற்படையினர் நேற்று (06) இரவு கைதுசெய்துள்ளனர்.

நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்த மீன்பிடி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை யாழ் கடற்றொழில் பரிசோதகரிடம் கடற்படையினர் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலைளில் மேலும் 11 மீனவர்களை மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்த 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் வடக்கு கடற்பரப்பில்  கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.