வடமேற்கு சிரியாவின் ஆசாஸ் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு, 85 பேர் காயமடைந்த நிலையில்,  சிரியாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கியின் தெற்கு மாகாணமான கிளிஸிலிருந்து எல்லையைத் தாண்டியுள்ள சிக்கு கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 15 பேர் துருக்கியின் எல்லையில் உள்ள வைதத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசு போராளிகளையும் சிரிய குர்திஷ் போராளிகளையும் சிரியாவின் எல்லையிலிருந்து விரட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையில் கடந்த 2016 இல் அங்காரா, சிரியாவிற்கு முதன்முதலில் படையெடுத்ததிலிருந்து துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அமெரிக்க ஆதரவுடைய ஒய்.பி.ஜி யை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அங்காரா கருதுகிறது. அதன் நடவடிக்கை 2017 இல் நிறைவுக்கு வந்தது.

சிரியா ஞாயிற்றுக்கிழமை அரசாங்க எல்லை முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது.

ஜனாதிபதி பஷர் அல்-அசாத் நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்திய பின்னர் நாடு வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மற்றும் புதிய அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக போராடுகிறது.