நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் இராணுவத்தினர் மீது கொள்ளைக்கார கும்பலொன்று மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.

‍நைஜீரிய படையினர் கட்சினா மாநிலத்தில், ஜிபியா மாவட்ட வனப் பகுதியினூடாக நடந்து சொன்று கொண்டிருந்தபேதே குறித்த கும்பல் அவர்கள் மீது எதிர்பாராத வன்னம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து 23 வீர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் காணாமல்போயுள்ள நிலையில் அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் அஞ்சப் படுகின்றது.

எவ்வாறெனினும் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.