நுகேகொட மேம்பாலத்தில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்றை முந்திச்செல்ல முற்பட்ட மற்றுமொரு பஸ் எதிரே வந்த இராணுவ கெப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இராணுவ கெப் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் விபத்தினை ஏற்படுத்திய பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.