முதல் விண்கலத்தை செவ்வாய் நோக்கி செலுத்தியது எமிரேட்ஸ்

By Vishnu

20 Jul, 2020 | 08:25 AM
image

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செவ்வாய்க் கிரகத்தை நோக்கி விண்கலம் ஒன்றை இன்று திங்கட்கிழமை காலை செலுத்தியுள்ளது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதன் விண்கலப் பயணம் இதுவாகும்.

1.3 டன்கள் எடையுள்ள இந்த விண்கலத்திற்கு ''நாமேட் அமல்'' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ''நாமேட் அமல்'' என்பதன் பொருள் நம்பிக்கை. 

ஜப்பானின் தானேகாஷிமா விண்வெளி நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி (21.58 GMT ஞாயிறு) இன்று காலை 6:58 மணிக்கு ஆளில்லா இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

செவ்வாய் கிரகத்தை சென்றடைய ஏறத்தாழ 500 மில்லியன் (50 கோடி) கி.மீ தொலைவு பயணிக்க வேண்டும். இந்த விண்கலம் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரகம் நிறுவப்பட்டதன் பொன்விழா ஆண்டாகும்.

காணொளிக்கு இங்கே அழுத்தவும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right