(செ.தேன்மொழி)

போதைப் பொருள் கடத்தல் காரர்கள் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தி தங்களது பணத்தை , ஈசிகேஸ் முறையினூடாக பறிமாற்றம் செய்து வருவதாக தெரிவித்த மேல்மாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் எவரேனும் இருந்தால் அது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படும்துமாறும் கேட்டுக் கொண்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதனால். அதற்கு அச்சம் கொண்டுள்ள இந்த கடத்தல்காரர்கள் மிகசூட்சுமுகமான முறையில் ஈசிகேஸ் முறையூடாக தங்களது பணத்தை பறிமாற்றம் செய்துவருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்று பல்கலைக்கழக மாவர்களை இவர்கள் பயப்படுத்தி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தொழில் வாய்ப்பு தேடிச் செல்லும் மாணவர்களை கண்டறிந்து , அவர்களுக்கு தொழிலை பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டு , அவர்களை தனியார் வங்கியொன்றில் கணக்கொன்றை ஆரம்பிக்குமாறு தெரிவித்து விட்டு , தாங்கள் அந்த கணக்கிற்கு பணத்தை வைப்பிலிடுவதாகவும் , பின்னர் அந்த பணத்தை பல்கலைக்கழக மாணவர்களை மீற எடுத்து ஈசிகெஸ் முறைமூலம் தங்களுக்கு அனுப்புமாறு குறிப்பிட்டு , இதனை செய்யும் மாணவர்களுக்கு சிறியளவிலான ஊதியத்தையும் வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன்,  இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்பட்ட பல பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்பட்ட மாணவர்கள் தங்களை அறியாமலே இந்த செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருவதுடன் , இனியும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறான நிலையில் இந்த மாணவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அரச தொழில் வாய்ப்புகளைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதேவேளை போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள சந்தேக நபர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இவ்வாறான கடத்தல்களை ஒழுங்கு செய்யும் நபர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் , அவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக சர்வதேச பொலிஸ் மற்றும் , வெளிநாடுகளுடன் இந்நாடு ஏற்படுத்திக் கொண்டுள்ள இரு தரப்பு ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பான சுற்றிவளைப்புகள் இடம் பெற்றிருந்தாலும் , ஆழமான முறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆழமான விசாரணைகளை முன்னெடுத்து இந்த கடத்தல்களுடன் தொடர்புடைய பிரதான நபர்களை கண்டறிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.