ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து அமைச்சர்களுடனும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட சந்திப்பொன்றினை இன்று (07) மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த சந்திப்பானது, இன்று பிற்பகல் 3 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மாலை 6.00 மணியளவில் அலரி மாளிகையில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.