மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட இந்திரஜித் குமாரசுவாமியை இன்று கோப் குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பிலான கணக்காய்வாளர் நாயகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிதிக்குழு மற்றும் நிதியமைச்சின் செயலாளரும் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.