யாழ்ப்பாணம், தென்மராட்சி - சாவகச்சேரி, மடத்தடி பகுதியில் இன்று (19) காலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இராசேந்திரன் நிருஜன் (25-வயது) என்ற இளைஞரே இவ்வாறு தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தெரியவராத நிலையில், சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.