(எம்.மனோசித்ரா)
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தனியார் பஸ்களை நாளை மறுதினம் செவ்வாய்கிழமை முதல் நூற்றுக்கு 50 சத வீதமாகக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன வீரகேசரிக்கு தெரிவித்தார்.

இந்த தீர்மானம் குறித்து அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில்,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் சுமார் இரண்டு மாதங்கள் நாடு முடக்கப்பட்டிருந்தது. இதனால் பொது போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் பெருமளவிலான தனியார் பஸ்கள் பழுதடைந்திருந்தன. எனவே நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் எமக்கான நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
எமது எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு எவ்வித நிவாரணங்களும் எமக்கு கிடைக்கப் பெறவில்லை.
நாடு வழமைக்குத் திரும்பிய பின்னர் பொதுப் போக்குவரத்து ஆரம்பமான போதிலும் ஆரம்பத்தில் 50 வீத பயணிகள் மாத்திரமே பஸ்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பின்னர் ஆசனங்களுக்கு ஏற்ற பயணிகளை உள்வாங்குவதற்கும் அனுமதியளிக்கப்பட்டது.
இதன் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். நாடு வழமைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சத்தின் காரணமாக மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் வீதம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
எனவே போதிய வருமானமின்றி சகல பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்துவது எமக்கு நஷ்டமாகும். எனவே தான் நாளைமறுதினம் முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு பஸ்களை குறைப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். எமக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்வதற்கு மாற்று ஏற்பாடுகள் அல்லது நிவாரணங்கள் எதுவுமே வழங்கப்படாத நிலையிலேயே இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM