பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் 25 வீதம் நிறைவு பெற்றுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று வீடுகளில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பிரதி தபால் மா அதிபர், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவ‍ேளை அனைத்து வாக்காளர் அட்டைகள் விநியோகத்தை 29 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் வாக்குச் சீட்டுகள் விநியோகிப்பதற்கான சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.