கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டு கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கையானது தற்போது 903 ஆக உயர்வடைந்துள்ளது.

இந் நிலையில் தற்போது மூன்று கடற்படை வீரர்கள் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.