வீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவிக்கு அமெரிக்காவின் மிச்சிகன் நீதிமன்றம் சிறைதண்டனை விதித்துள்ளமை அமெரிக்காவில் மற்றுமொரு ஆர்ப்பாட்டத்திற்கு காரணமாகியுள்ளது.

Protesters hold up a sign saying: Justice for Grace, at a rally in Pontiac, Detroit, on 16 July 2020Protesters hold up a sign saying: Justice for Grace, at a rally in Pontiac, Detroit, on 16 July 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல நாடுகளில் மாணவர்களுக்கு இணையத்தின் மூலம் கல்வி நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  வீட்டுப் பாடங்களை எழுத தவறிய அமெரிக்க - ஆபிரிக்க இனத்தை சேர்ந்த  கிரேஸ் எனப்படும் 15 வயது மாணவி ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகன் நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

குறித்த சிறுமி ஏற்கனவே குற்றச்செயல் காரணமாக சிறார் நீதிமன்ற விசாரணை மூலம் ஏப்ரல் நடுப்பகுதியில்  தகுதிகாணலில் வைக்கப்பட்டார், தகுதிகாண் விதிமுறைகளில் கல்வி செயற்பாடுகளை ஒழுங்காக செய்வதும் உள்டங்குகின்றது.

Student holds up a sign saying: "I didn't do my schoolwork either. Free Grace"at a rally in the Detroit suburb of Pontiac on 16 July 2020

இந்நிலையில், கிரேஸ் தனது தகுதிகாண் விதிகளை மீறியுள்ளார் என்பதை தீர்மானிக்க மே மாத நடுப்பகுதியில் நடந்த விசாரணையில் வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம், அந்த மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறி இருக்கிறார் என்றும், அவர் மீதுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளை வைத்து அவர் இந்த சமூகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்பு குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் நீதிபதி மேரி எல்லன் ப்ரெமென் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் வீட்டுப்பாடம் செய்யாத மாணவி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மிச்சிகன் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Protest in support of Grace in front of Oaklands County Court in Michigan on 16 July 2020