பயாகல - கடுகுருந்த பகுதியில் இன்று அதிகாலை 04.10 மணிளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பயாகல பொலிஸார் தெரிவித்தனர். 

புதுக்கடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று கட்டுகுருந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை, கத்மணவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மற்றுமொரு பஸ் அதனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த 3 பெண்கள் உள்ளிட்ட 36 பேர் களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 15 இராணுவ சிப்பாய்களும் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான  ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 

குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.