கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை பாதுகாக்க பிளாஸ்மா தானம் செய்யுமாறு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

உலக அளவில் 14 மில்லியன் மக்களுக்கும், இந்திய அளவில் ஒரு மில்லியன் மக்களுக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் தருணத்தில் குணமடைவாரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. 

தற்போது அவற்றிலிருந்து குணமடைந்தவர்கள் குருதியை தானமாக பெற்று, அதிலிருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்தெடுத்து, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதற்கு அதிக அளவில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சிகிச்சையின் மூலம் நோயாளிகள் விரைவில் குணமடையும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் ரத்த தானம் செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 400 கிராம் பிளாஸ்மா தானம் வழங்கினால், இரண்டு உயிர்களை பாதுகாக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

இது குறித்த விழிப்புணர்வு உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இந்த விழிப்புணர்வு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்குபற்றி விஜய் சேதுபதி பேசுகையில்,' கருணையும் பச்சாதாபம் இந்த நேரத்தில் அவசியமாக உள்ளது. எனவே கொரோனாவிலிருந்து குணமடைந்தவராக இருந்தால் தயவு செய்து பிளாஸ்மா தானம் செய்து, கொரோனாவிற்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு உதவி செய்யுங்கள். இதன் மூலம் ஒரு குடும்பத்தின் உயிரை உங்களை காப்பாற்றலாம்.' என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதனிடையே தமிழகத்தில் பிறந்து தற்போது சர்வதேச அளவில் சிறந்த புகைப்பட கலைஞராக போற்றப்படும் எல் ராமச்சந்திரன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை வைத்து நடத்திய போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.