(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்து தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்தற்கான மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினமான மார்ச் 2 ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்பிற்கு முன்னரான (ஜூலை 12) வரை பதிவாகிய தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து இந்த நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய மாவட்ட அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ,
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான சட்ட மீறல்கள் அல்லது வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இம் மாவட்டத்தில் 36 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பதுளை மாவட்டத்தில் 33 , மட்டக்களப்பில் 13 , அநுராதபுரத்தில் 34 , திகாமடுல்லவில் 15 , காலி மாவட்டத்தில் 6, கம்பஹா மாவட்டத்தில் 6, அம்பாந்தோட்டையில் 20, யாழ்ப்பாணத்தில் 21, களுத்துறையில் 14 வன்முறை அல்லது தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதே போன்று கண்டி மாவட்டத்தில் 8, கேகாலை 5, குருணாகல் 25, மாத்தளை 8, மாத்தறை 8, மொனராகலை 13, நுவரெலியா 8 , பொலன்னறுவை 20, புத்தளம் 24, இரத்தினபுரி 19, திருகோணமலை 7, வன்னியில் 30 வன்முறை அல்லது தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதே வேளை தேர்தல் சட்ட மீறல்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டள்ளமைக்கமைய ,
126 சட்ட விரோத பிரசாங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போன்று சட்ட விரோதமாக சுவரொட்டிகள் அல்லது பதாதைகள் 126 ஒட்டப்பட்டுள்ளன. சுகாதார வழிகாட்டல்களை மீறிய சம்பவங்கள் 47 பதிவாகியுள்ளன. 7 வெறுக்கத்தக்க பேச்சுக்களும் , 10 சட்ட விரோத அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அரச வளங்களை தவறான பயன்படுத்திய சம்பவங்கள் 20 பதிவாகியுள்ளன. தேர்தல் காலத்தில் பொது மக்களுக்கு பொருட்களை பகிர்ந்தளித்த சம்பவங்கள் 14 பதிவாகியுள்ளன. அரச அதிகாரிகள் பிரசாரத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் 7 பதிவாகியுள்ளதோடு இவை தவிர ஏனைய சம்பவங்கள் 25 பதிவாகியுள்ளன.
கட்சிகளினடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளமைக்கயைம ,
பொதுஜன பெரமுன கட்சி 191 தேர்தல் சட்ட மீறல்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி 81 , ஐக்கிய தேசிய கட்சி 30 , இலங்கை தமிழரசுக் கட்சி 13, தேசிய மக்கள் சக்தி 11, ஏனையவை 44 , அடையாளங்காணப்படாத கட்சிகள் 9 மற்றும் அரச அதிகாரிகள் அல்லது பாதுபாப்புத்துறையினர் 3 தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றினப்படையில் மொத்தமாக இவ்வாறாக சட்ட மீறல்கள் 382 பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்தற்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM