கடந்த 24 மணித்தியாலத்தில் 1,824 பேர் கைது - பொலிஸ் தலைமையகம்

Published By: Digital Desk 3

18 Jul, 2020 | 03:49 PM
image

(செ.தேன்மொழி)

திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

இதற்கமைய கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது , சட்டவிரோத ஆயுதங்கள் , போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும் , பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய  1,824 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 420 சந்தேக நபர்களுள் 232 சந்தேக நபர்கள்  ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 140  கிராம் 928  மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா போதைப் பொருளுடன் 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து ஒரு கிலோ 222 கிராம் 730 மில்லிகிராம் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடன் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவரிடமிருந்து  3 கிராம் 310 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 3667 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இதன்போது  ரிபீடர் ரக துப்பாக்கி ஒன்றும், வாள் மற்றும் கத்தியும்   கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 386 சந்தேக நபர்களும், வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்த 665 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு இணங்க கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று  நள்ளிரவு வரை 1824 சந்தேக நபர்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30