இலங்கையின் முன்னணி ஆடம்பர நவநாகரீக ஆடை விற்பனை நிறுவனம் என்ற வகையில், பெஷன் பக், தமது புதிய கிளையை கொட்டாஞ்சேனையில் திறந்து வைத்துள்ளது. 2020 ஜுலை 10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையம், நாடளாவிய கிளை வலையமைப்பின் 16வது பெஷன் பக் கிளையாகும்.

சுமார் 25 வருடங்களுக்கு முன், மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட பெஷன் பக், தற்போது இலங்கையின் நவநாகரீக ஆடை வகைகளின் அழகிய அரங்கமாக அழைக்கப்படும் புகழ்பெற்ற நாமமாக மாறியுள்ளது. பல அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த நிலையம், ஆடை வகைகள், பாதணிகள், விளையாட்டுப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் கொட்டாஞ்சேனை நகரில் பெஷன் பக் புதிய கிளை கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு சமய கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வாழும், மிகத் துரிதமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாக கொட்டாஞ்சேனை திகழ்ந்து வருகிறது. நிறுவனத்தின் ஏனைய சகல கிளைகள் போன்று இந்தக் கிளையும் மகளிர், ஆடவர், சிறுவர் ஆகிய அனைவருக்குமான, அலுவலக மற்றும் சாதாரண பாவனைக்கான ஆடை வகைகள், வைபவங்களுக்கான கவர்ச்சி மிகுந்த ஆடை வகைகள் மற்றும் ஏனைய சகல தேவைகளுக்கும் ஏற்ற ஆடை வகைகளையும் விற்பனைக்குக் கொண்டுள்ளது.

நன்கு திட்டமிடப்பட்டு, பல மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதி போதியளவு இடவசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், தமது விருப்பத்திற்கேற்ப பொருள் கொள்வனவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கிளை போதுமான அளவு வாகனத் தரிப்பிட வசதியையும் கொண்டுள்ளது.

புதிய நிலையம் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் உரையாற்றிய பெஷன் பக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சபீர் சுபியான், ‘சமூக அடிப்படையிலும், பொருளாதார ரீதியிலும் கடுமையான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள இவ்வாறான ஒரு சூழ்நிலையில், புதிய கிளையொன்றைத் திறந்து வைப்பது பெஷன் பக் நிறுவனத்தின் மாபெரும் வெற்றியாகும். தற்போதைய நிலையில் பொது மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாம் கவனத்திற் கொண்டு, நாட்டின் ஒரு முன்னணி வர்த்தக நிறுவனம் என்ற வகையில், பெஷன் பக் தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையிலும், அதேவேளை, தனது ஊழியர்கள், ஏனைய ஆர்வமுடையோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருகிறது. 

கொட்டாஞ்சேனை, பல்வேறு கலாசாரங்களும், சமயங்களும் கலந்த ஒரு மையமாகும். எனவே, எமது வர்த்தக நாமத்தை இந்த மக்களிடையே இட்டுச் செல்வது மிகப் பொருத்தமாகும். இந்தப் புதிய கிளையின் ஆரம்பத்துடன், கொட்;டாஞ்சேனை நகருக்கு அருகாமையில் வசிக்கும் அனைவரும் இந்தப் புதிய நவநாகரிக அனுபவத்தை அடைந்திட, பெஷன் பக் நிறுவனததிற்கு வருகை தருமாறு நாம் அன்புடன் அழைக்கின்றோம்’ என்று கூறினார்.

இந்த நிகழ்வில், ADELA கம்பனி நிறுவனத்தின் ஆரம்பகர்த்தா, தேசமாண்ய தேஷபந்து திரு. எஸ்.பி.சிவராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். பெஷன் பக் நிறுவனத்தின் முகாமைத்துவம் மற்றும் முக்கிய வர்த்;தகப் பங்காளிகள் முன்னிலையில் இக்கிளை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.