அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் வசித்து வரும் பிரிட்ஜர் என்ற சிறுவன், தனது தங்கையை காப்பாற்ற நாயிடம் போராடிய சிறுவனின் முகத்தில் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன.

பிரிட்ஜரின் குறித்த சம்பவம் தொடர்பான பதிவு வைரலனதையடுத்து, பல பிரபலங்கள் சிறுவனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவெஞ்சர் நாயகன் கிறிஸ் இவான்ஸ் சிறுவனுக்கு அனுப்பிய வீடியோ மெசெஜில் . '' உன்னைப் போன்ற ஒருவனை சகோதரனாக அடைய உன் தங்கை கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன்னை பெற்றதற்காக உன் பெற்றோர் பெருமையடைவார்கள். என்னிடத்திலுள்ள கேப்டன் ஒப் அமெரிக்கா கேடயத்தை உனக்கு உறுதியாக அனுப்பி வைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை மார்க் ரபல்லோ மற்றும் ஆன் ஹாத்வே ஆகியோர், அவரது துணிச்சலை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.