கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முகக்கவசங்களை அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார்.

அமெரிக்க மக்கள் முக்கவசம் அணிவதில் "முடிந்தவரை பலமாக" இருக்க வேண்டும் என்று மாநில மற்றும் உள்ளூர் தலைவர்களை  அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரான அந்தோனி பௌசி வலியுறுத்திய நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

முகக்கவசங்களை அணிந்துகொள்வது, "மிகவும் முக்கியமானது" மற்றும் "நாம் அனைவரும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்" என பௌசி மேலும் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிவது அமெரிக்காவில் மிகவும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிவதை பல மாதங்கள் புறக்கணித்து வந்த  ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த சனிக்கிழமையன்று முதன்முறையாக முகக்கவசம் அணிந்த நிலையில தோன்றினார்.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை 77,499 ஒநே நாளில் தொற்றுக்குள்ளான நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை 70,674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் 3,647,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 139,255 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .