ஒந்தாச்சிமடம் கடற்கரையில்  சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஏழு பிள்ளைகளின் தந்தையான நடராசா தங்கராசா வயது 48 என்பவர் என இறந்தவரின் உறவினர் அடயாளங்காட்டியுள்ளனர்.பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியிருந்தவர் இறப்பதற்கு முதல்நாள் வீட்டுக்கு வருகைதந்திருந்தார் என்றும் மறுநாள்  வீட்டை விட்டு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிந்தோம் என அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். மரணம் தொடர்பில் கொலையா, தற்கொலையா என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.