இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 139 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில்  12 வயதுடைய சிறுமிக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்

இன்று நாட்டில் ஒருவருக்க மட்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,688 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 665 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 99 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 2,012 பேர் குணமடைந்தும், 11 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.