வர்த்தமானியை அரசாங்கம் வெளியிடாமல் இருப்பதற்கு காரணம் என்ன ? - மரிக்கார் கேள்வி

17 Jul, 2020 | 05:59 PM
image

(செ.தேன்மொழி)

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை அரசாங்கம் வெளியிடாமல் இருப்பதற்கு காரணம், அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரியளவிலான பிரசார நடவடிக்கைக்கு அது சிக்கலை தோற்றுவிக்கும் என்பதற்காகவே என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.மரிக்கார் குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு ஆளும் தரப்பினர் வழங்கிவரும் துண்டுபிரசாரங்களில் எழுதப்பட்டுள்ளது. அதில் இன்னுமொரு விடயத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். அதாவது 'வைரஸ் பரவலை கட்டுபடுத்தி இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை ஏற்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டாம்' என்று.பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தினால் நாட்டை மூடிவைக்காமல் , வேட்புமனுதாக்கல் முடிவுறுவரையில் விமான நிலையங்களை திறந்து வைத்ததாலே வைரஸ் பரவல் நாட்டுக்குள் பரவியது. அந்தக்காலப் பகுதியல் பி.சி.ஆர் பரிசோதனைகளை முறையாக நடத்தியிருந்தாலே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் மேடைகளில் பேசப்படுவதைப் போன்று நாட்டில் வைரஸ் பரவலினால் அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.  அப்படியொன்றால் மக்கள் வீனாகவா அச்சம் கொண்டுள்ளார்கள். வைரஸ் அச்சுறுத்தல் இல்லை என்றால் எதற்காக மீண்டும் பாடசாலைகளை மூடிவைத்துள்ளார்கள். தேர்தல் முடிவுறும் வரையில் பாடசாலைகளை திறக்கபோவதில்லை என்று அவர்களின் கட்சிசார் இணையத்தள பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கந்தகாட்டு முகாமிலிருந்து வரைஸ் மீண்டும் பரவ ஆரம்பித்தன் காரணமாகவே இந்த நெருக்கடி மீண்டும் ஏற்பட்டுள்ளது. அதனால் வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றே நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேர்தல் சட்டவிதிகள் மற்றும் தேர்தலை நடத்துவதாற்கான திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்க முடிந்தாலும் , சுகாதார விதிமுறைகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சரே முடிவெடுக்க முடியும். நான் அறிந்த வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த அறிக்கையை ஜூன் மாதத்தின் ஆரம்பப்பகுதியிலேயே பெற்றுக் கொடுத்துள்ளார்.

அரசாங்கம் பாரியளவிலான பிரசார நடவடிக்கையை முக்னெடுக்க  முடிவெடுத்துள்ளது. இதன்போது சுகாதார சட்டவிதிகள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டால் சிக்கல் ஏற்படும். தாங்கள் தேர்தலை வெற்றிக் கொள்வதற்காக நாட்டு மக்களை மரணத்திற்கும் அழைத்துச் செல்வார்கள். முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் தான் 2000-3000 இராணுவ வீரர்களை கொலைச் செய்ததாகய தெரிவித்த போதிலும் அரசாங்கம் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கொலையே இவ்வளவு செய்திருந்தால் 5000 பேர் வரை அங்கவீனமடையச் செய்திருக்கவும் வாய்ப்புள்ளது. தேசப்பற்றாளர்கள் என்று தங்களை காண்பித்துக் கொள்ளும் இவர்களது ஆட்சியில் கருணாவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டாலும் நாம் வியப்படைய வேண்டி ஏற்படாது.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதுடன் , மக்கள் வாழ்வதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரச உத்தியோகஸ்தர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். மஹிந்த 50 வருடம் அரசியல் வாழ்கையில் செய்யமுடியாததையா ? மீண்டும் வந்து செய்யப் போகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 73 வருட அரசியல் வாழ்கையில் செயாததையா  இதற்கு பின்னர் வந்து செய்யப் போகின்றார். 60 வயதுக்கு குறைந்த, தோல்வியடையாதவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மாத்திரமே இருக்கின்றார். இவருடன் சிறந்த இளம் தலைவர்கள் இணைந்துக் கொண்டுள்ளனர்.

இதனால் 5 வருட ஆட்சியை அவருக்கு பெற்றுக் கொடுங்கள்,  அவரது காலத்தில் அவர் தோல்வியை சந்தித்தால் ,  மீண்டும் சந்தர்பத்தை வழங்காதீர்கள். சிலவேளை சித்தியடைந்தால் இன்னுமொரு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுங்கள். இளைஞர்கள் அரசியல் தொடர்பில் தெளிவுடன் செய்றபடுங்கள்.  உங்களுக்கு தேவையில்லை என்று இருக்க வேண்டாம். ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் மீது உண்மையான பற்றைக் கொண்டிருந்தால். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவே பேச வேண்டும். ஆனால் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராகவே பேசிவருகின்றது. இதுதான் ராஜபக்ஷாக்கள் அவர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ள டீல் போன்று எமக்கு தோன்றுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47
news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54