ஸ்பெய்னில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்தாட்டத்தின் கடைசிக் கட்டத்துக்கு முன்னைய கட்டப் போட்டியில் விலாரியல் கழகத்தை 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட ரியல் மெட்றிட் கழகம் சம்பியனானது.
லா லிகா கால்பந்தாட்ட வரலாற்றில் ரியல் மெட்றிட் கழகம் வென்றெடுத்த 34ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும்.
இவ் வருட லா லிகா கால்பந்தாட்டத்தில் சம்பயினாவதற்கு கடைசி இரண்டு போட்டிகளில் இரண்டு புள்ளிகளைப் பெற்றாலே போதும் என்ற நிலையில் வியாழனன்று விலாரியல் கழகத்தை எதிர்கொண்ட ரியல் மெட்றிட் கழகம் கடும் சவாலுக்கு மத்தியில் வெற்றியீட்டி 37 போட்டிகளில் 86 புள்ளிகளுடன் சம்பியனானது.
தனது சொந்த மைதானமான அல்ப்ரெடோ டி ஸ்டெபானோ விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியில் கரிம் பென்ஸிமா போட்ட ஒரு பெனல்டி உட்பட இரண்டு கோல்கள் ரியல் மெட்றிட் கழகத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியது.
போட்டியின் 29ஆவது நிமிடத்தில் ரியல் மெட்றிட் கழகத்துக்கு முதலாவது கோலை போட்டுக்கொடுத்த பென்ஸிமா, 77ஆவது நிமிடத்தில் பெனல்டி கோல் ஒன்றையும் போட்டார்.
போட்டி முடிவடைய 7 நிமிடங்கள் இருந்தபோது விசென்டே இபோரா போட்ட கோலைத் தொடர்ந்து கோல் நிலையை சமப்படுத்த விலாரியல் கழகம் எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது.
கோரானா தொற்றுநோய் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் தடைப்பட்டு மீண்டும் கடந்த மாதம் தொடர்ந்த லா லிகா கால்பந்தாட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள கடைசிக் கட்டப் போட்டிகளுடன் நிறைவடையும்.
பார்சிலோனாவுக்கு ஏமாற்றம்
கெம்ப் நூ விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு லா லிகா போட்டியில் ஒசாசுனா கழகத்திடம் 1 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் பார்சிலோனா கழகம் தோல்வி அடைந்து பலத்த ஏமாற்றம் அடைந்தது.
போட்டியின் கடைசி 13 நிமிடங்கள் பத்து வீரர்களுடன் விளையாடிய ஒசாசுனா கழகம் உபாதையீடு (94ஆவது நிமிடம்) பெற்ற கோல் மூலம் வெற்றியீட்டியது.
இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ஜொசே அமாய்ஸ் மூலம் முதலாவது கோலை ஒசாசுனா கழகம் போட்டது.
இடைவேளையின் பின்னர் 62ஆவது நிமிடத்தில் பார்சிலோனா கழகம் சார்பாக லயனல் மெசி கோல் நிலையை சமப்படுத்தினார்.
15 நிமிடங்கள் கழித்து ஒசாசுனா கழக வீரர் என்ரிக் காலெகோ, மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்காகி வெளியேற்றப்பட்டார்.
10 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் மிகத் திறமையாக விளையாடிய ஒசாசுனா கழகம் உபாதையீடு நேரத்தின் கடைசிக்கட்டத்தில் டொரெஸ் போட்ட கோல் மூலம் அபார வெற்றிபெற்றது.
இப் போட்டியில் பார்சிலோன கழகம் தோல்வி அடைந்தபோதிலும் லா லிகா கால்ப்நதாட்டத்தில் 79 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தை உறுதி செய்துகொண்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM