2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகளுக்கு சட்டமா அதிபர் தபுல டிலிவேர ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகளை சுகாதார அமைச்சகம் கடந்த மாதம் தயாரித்திருந்தது. 

இந் நிலையில் இந்த ஆலோசனைகளுக்கு தற்போது சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளமையினால் நாளை அல்லது நாளை மறுதினம், தேர்தலுக்கான பதுகாப்பு ஆலோசனை வழிகாட்ல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.