ஹோமாகம - நுகேகொடை நான்காம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பொலிஸார் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் பிரிவில் பெண் சார்ஜண்ட் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையிலே, பொலிஸார் இவ்வாறு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒன்பது பொலிஸ் அதிகாரிகளும் மற்றும் நான்கு சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் ஹபராதுவ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும், 13 பொலிஸாரும் ஐந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் அத்திட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.