கிளி­நொச்­சியில் மீண்டும் கடும் ­மழை; பரீட்சை எழுத சென்ற மாண­வர்கள் பெரும் அவதி 

09 Dec, 2015 | 09:32 AM
image

கிளி­நொச்சி மாவட்­டத்தில் தற்­போது பெய்து வரும் கடும் மழை கார­ண­மாக ஏற் ­பட்­டுள்ள வெள்ளம் வீதி­களில் குறுக்­க­றுத்து பாய்­வ­தனால் சாதாரண தர பரீட்­சைக்கு செல்லும் மாண­வர்கள் பெரும் நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்­றனர்.

அத்­தோடு பரீட்சை மண்­ட­பங்­க­ளிலும் இருள் சூழ்­ந்த நிலைமை காணப்­ப­டு­வ­த னால் மாண­வர்கள் மேலும் சிர­மங்­களை சந்­தித்து வரு­கின்­றனர்.

கிளி­நொச்­சியில் 43 பரீட்சை நிலை­யங்­களில் 5561 பேர் 2015 க.பொ.த. சாதா­ர­ண­தர பரீட்சை எழு­து­கின்­றனர். இதில் 3261 பாட­சாலை பரீட்­சார்த்­தி­களும் 2286 தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­களும் அடங்­கு­ கின்­றனர். அத்­தோடு 10 பரீட்சை இணை ப்பு அலு­வ­ல­கங்­களும் அமைக்­கப்­பட்­டு ள்­ளன.

மேற்­படி பரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்கள் தொடர்ச்­சி­யாக பெய்து வரும் மழை கார­ண­மாக பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு சென்று வரு­வதில் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்கின்றனர்.

இதே­வேளை பூந­கரி கல்­விக்­கோட்­டத் தின் முழங்­காவில் மற்றும் ஜெய­புரம் பிர­தே­சங்­க­ளுக்­கான பரீட்சை வினாத்­தாள்கள் மாங்­குளம், மல்­லாவி, வெள்­ளாங்­குளம், ஊடாக நூற்­றுக்­க­ணக்­கான கிலோ மீற்றர் சுற்­றியே எடுத்துச் செல்­லப்­ப­டு­கி­றது. பூந­கரி, மன்னார் ஏ –35 வீதியில் மண்­டக்­கல்­லாறு பெருக்­கெ­டுத்து பாய்­வ­த­னாலும், முறி­கண்டி, முழங்­காவில் வீதியில் அக்­க­ராயன் பகு­தியில் வீதியை குறுக்­க­றுத்து வெள்ளம் பாய்­வ­த­னாலும் மேற்­படி மாற்­று­வ­ழி பயன்­ப­டுத்­தப்படுகிறது.

நேற்றுக் காலை முதல் பெரும்­பா­லான பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு கிளி­நொச்சி வலயக் கல்விப் பணிப்­பாளர் நேர­டி­யாக சென்று நிலை­மை­களை பார்­வை­யிட்­டுள்­ள­தோடு இரு­ள் சூழ்ந்த பரீட்சை நிலை­ய ங்­களின் நிலை­மை­களை தவிர்­க்கும் பொரு ட்டு ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்ளார். மின்சாரம் கிடைக்கப்பெறாத கிளிநொச்சி வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்திற்கு மின் பிறப்பாக்கி மூலம் மின்சார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறி ப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீங்களும் நடாசாவின் நிகழ்ச்சிக்கு சென்றீர்களா? பொலிஸார்...

2023-05-29 14:42:30
news-image

திருமலை தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் தீ...

2023-05-29 14:31:51
news-image

சம்மாந்துறையில் அதிபருக்கு எதிராகவும் சார்பாகவும் மாணவர்கள்,பெற்றோர்கள்...

2023-05-29 14:30:25
news-image

யாழில் மோட்டார் சைக்கிளும் கனரக வாகனமும்...

2023-05-29 13:47:44
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலமாகவே உள்ளது...

2023-05-29 13:02:04
news-image

கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் -...

2023-05-29 14:37:54
news-image

கைத்தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள்,...

2023-05-29 13:07:42
news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை  புண்ணியஸ்தலத்தை புனிதபூமியாக...

2023-05-29 14:31:45
news-image

திருமண நிகழ்வில் பட்டாசு வெடித்து ஒருவர்...

2023-05-29 12:41:20
news-image

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய...

2023-05-29 12:21:57
news-image

கொழும்பு கிராண்டபாஸில் 67 வயதுடைய பெண்ணிடம்...

2023-05-29 12:21:39
news-image

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய...

2023-05-29 11:56:25