2020 ஜூன் 25 அன்று நடைபெற்ற கூட்டத்தில், சம்பத் வங்கியின் பணிப்பாளர் சபையானது  2020 ஜூன் 25 முதல் அமுலுக்கு வரும் வகையில் திரு. வஜிர குலத்திலக அவர்களை வங்கியின் பணிப்பாளர் சபையில் நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீன பணிப்பாளராக நியமிக்க முடிவு செய்திருந்தது.

இலங்கையில் வங்கிச்சேவை, நிதிச்சேவை மற்றும் மூலதன சந்தை நடவடிக்கைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை வஜிர குலத்திலக அவர்கள் கொண்டுள்ளார். இதற்கு முன்னர், அவர் NDB முதலீட்டு வங்கி கொத்தணியின் பணிப்பாளர்; ஃ தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளதுடன், அங்கு நாட்டின் வங்கிச்சேவைத் துறையில் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பிற்கான இனங்காணல் அங்கீகாரமாக அவர் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் Global Banking and Finance Review இதழால் ‘இலங்கையின் சிறந்த முதலீட்டு வங்கிச்சேவை தலைமை நிர்வாக அதிகாரி’ ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

அவர் 2014 முதல் 2017 வரை கொழும்பு பங்குச் சந்தையின் பணிப்பாளர் சபைத் தலைவராகவும், 2015 முதல் 2017 வரை தெற்காசிய பரிவர்த்தனை (South Asian Federation of Exchanges)பணிப்பாளர் சபைத் தலைவராகவும், 2015 முதல் 2019 வரை மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

வஜிர குலத்திலக அவர்கள் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியல் துறையில் விஞ்ஞான கலைமாணி முதல் வகுப்பு சிறப்பு பட்டம் பெற்றுள்ளதுடன், மற்றும் தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து (Asian Institute of Technology)தொழில்துறை பொறியியல் மற்றும் முகாமைத்துவத் துறையில் விஞ்ஞான முதுமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் ஒரு பட்டய நிதி ஆய்வாளர் (CFA) என்பதுடன், ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கைநிலையத்தின் (CFA) சக அங்கத்தவராகவும் உள்ளார்.