ஆக்கத்துக்கு மாத்திரமல்ல அழிவிற்கும் இன்று தொழில்நுட்பம் காரணமாகிவிட்டது. பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள், யுவதிகள் என்று கைபேசியே கதியாக கிடக்கின்றனர்.
மேலும் புதிது புதிதாக கைபேசி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் பொழுதுபோக்கு செயலிகள் பலரின் உயிருக்கு உளை வைத்துள்ளதையும் காணமுடிகின்றது .
ஐரோப்பிய நாடுகளில் ப்ளூவேல் போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையானவர்கள் பலர் தங்கள் உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டது மாத்திரமன்றி தற்கொலை செய்து கொண்டமையும் பலரும் அறிந்த விடயமாகும்.
இதேபோன்று டிக் டொக் செயலியும் இன்று பலரது வாழ்க்கையை சீரழித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் குடும்பப் பெண்கள் கூட இந்த டிக்டொக் செயலிக்கு அடிமையாகி மிகவும் அருவருப்பான விதத்தில் நடந்து கொண்டிருக்கின்றனர்.
அதனை பதிவேற்றியதையடுத்து பலரது குடும்ப வாழ்க்கை சீரழிந்தது. இந்த நிலையில் சமூகத்தில் எதிர்ப்புக் கிளம்பிய போதிலும் பலரும் அதனைக் கைவிட முடியாதவர்களாகவே காணப்பட்டனர்.
எனினும் மிகுந்த போராட்டத்துக்குப் பின்னர் இந்தியாவில் டிக் டொக் செயலி முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது சமூக மட்டத்தில் இந்த நடவடிக்கை தொடர்பில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
இதேவேளை டிக் டொக் செயலி தொடர்பில் அமெரிக்கா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. tik tok , we chat போன்றன சீனாவின் மிகப்பெரிய உளவு சாதனம் என்று குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபேர்ட் ஓ பிரைன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கையடக்கத்தொலைபேசி செயலிகளான tik tok , we chat என்பன சீனாவின் மிகப்பெரிய உளவு சாதனம் . டிக்டொக்கில் முகத்தை அடையாளம் காணும் வசதியுள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட நபரின் தகவல்கள் திருடப்படுகின்றன.
இதன் மூலம் சீனா ஒரு நாட்டின் உயரிய தகவல்களை இலகுவாக பெற்றுவிடும். அனைத்து தகவல்களும் சீனாவில் உள்ள சூப்பர் கணணிக்கு நேரடியாக அனுப்பப்பட்டு சேமிக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார் .
இந்தியா ஏற்கனவே இதனை தடை செய்துள்ள நிலையில் அமெரிக்காவும் இதர ஐரோப்பிய நாடுகளும் இதனை விரைவில் தடை செய்யும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரொபேர்ட் ஓ பிரைன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
எது எவ்வாறு இருப்பினும் முகப்புத்தகங்கள் தொடக்கம் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தமது தனிப்பட்ட தகவல்களை ஒருவர் வழங்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பதும், கூடுதலான அளவு அதனைத் தவிர்த்துக்கொள்வதும் ஒருவரின் சுய பாதுகாப்புக்கு அவசியமானது.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM