(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாடு எதிர்கொண்டு பொருளாதார வீழ்ச்சியை ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்வைத்திருக்கின்றார் என ஐக்கிய தேசிய கட்சி மத்திய கொழும்பு அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மொஹமட் பைரூஸ் தெரிவித்தார்.
மத்திய கொழும்பில் அமைந்திருக்கும் தேர்தல் பிரசார காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லாததன் காரணமாகவும் கொராேனா வைரஸின் தாக்கத்தினாலும் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. வீழ்ந்நிருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை. தேர்தலை எப்படியாவது வெற்றிகொள்ளவேண்டும் என்பது மாத்திரமே இவர்களின் திட்டமாகும்.
அத்துடன் நாட்டின் வருமானத்தில் 78 வீதம் வருடாந்தம் கடன் தவணை செல்லுத்த இருக்கின்றது. அப்படி இருக்கும்போது எஞ்சியிருக்கும் 22வீத வருமானத்திலே நாட்டின் அனைத்து செலவுகளையும் ஈடுசெய்யவேண்டும். இது சாத்தியமானதொன்றல்ல. அதனால் மக்கள் தொடர்ந்தும் பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அத்துடன் கொராேனா தொற்று அச்சுறுத்தல் தற்போதும் இருந்து வருகின்றது. தேர்தல் பிரசார நடவடிக்கைகள நாங்களும் அச்சத்துடனே மேற்கொள்கின்றோம். ஆனால் வாக்காளர்களை பாதுகாக்க அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டலையும் அரசாங்கம் வர்த்மானிப்படுத்தாமல் இருக்கின்றது. அதனால் பொதுத் தேர்தலில் 50 வீத வாக்களிப்புகூட இடம்பெறுமா என்ற சந்தேகம் இருக்கின்றது. தேர்தல் முடியும்வரை அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை.
அத்துடன் பாராளுமன்றம் கடந்த 5மாதங்களாக மூடி இருக்கின்றது. பாராளுமன்றத்தை மூடிக்கொண்டு எவ்வாறு சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்க்கவும் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும். அது அனைவரும் அறிந்த விடயம். அதற்கான வேலைத்திட்டங்களையும் ஐக்கிய தேசிய முன்வைத்திருக்கின்றது. ஆனால் வேறு எந்த கட்சிகளின் தலைவர்களும் பொருளாதாரத்தை கட்டியெழும்புவதற்கான வேலைத்திட்டத்தை இதுவரை முன்வைக்கவில்லை என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM