அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இன்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைக்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் உட்பட 6 பேர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னபாக  இன்று மாலை அமைதியின்மையும் பதற்ற நிலையும் நிலவுவியது..

அங்குலான – லுணாவ பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸாரினால் நடத்தப்பட்ட சோதனையின் போது முச்சக்கரவண்டியில் சென்ற சிலருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதலில் பொலிஸ் உத்தியோகத்தரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாகவே இன்று அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னபாக அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.