வவனியா சுகாதாரத் திணைக்களத்தின் அனுசரணையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் இன்று மாலை வவுனியா நகரப்பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை பெருக்கெடுத்துள்ளது. இதனால் இலங்கையில் பல மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு , சுகாதாத்துறையினரின் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன . 

இந்நிலையில் வடமாகாணத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுவதால் வவுனியா சுகாதாரத் திணைக்களத்தின் அனுசரணையில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினால் வவுனியா நகர்ப்பகுதிகளில் வாகன ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுவது முகக்கவசம் அணிவது, 

கைகளை நன்றாக கழுவுவது ஒரு வியாபார நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்து , வீதிகளில் எச்சில் துப்புவது போன்ற வற்றை கட்டுப்படுத்தவும் செயற்படுத்தவும் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன .