கொஸ்கொட தாரக்கவின் நெருங்கிய சகாக்கள் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாதாள உலக குழு உறுப்பினரான கொஸ்கொட தாரக்கவின் மிக நெருங்கிய சகாக்களான 34 வயதாக பெண் ஒருவரும், 43 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.