ஜனாதிபதி கோத்தாபயவின் பிடிவாத அரசாங்கத்திற்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் -  நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க

Published By: Digital Desk 3

16 Jul, 2020 | 04:46 PM
image

(செ.தேன்மொழி)

வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி வரும் நாட்டு மக்களுக்கு எந்தவித நலனையும் பெற்றுக் கொடுக்காமல் இருக்கும் ஜனாதிபதி கோத்தாபயவின் பிடிவாத அரசாங்கத்திற்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க , எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை வெளியேற்றாவிட்டால் வாழுவதற்கான சுதந்திரமும் பறிபோய்விடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு முறையான செய்பாடுகளை மேற்கொள்ளாமல் , வைரஸ் பரவியதும் இரு மாத காலமாக நாட்டை முடக்கிவைக்க தீர்மானித்திருந்தனர். அதனால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு கூட இந்த அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. தங்களை மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர்களாகவே காண்பித்து வந்தனர்.

இரு மாதங்களுக்கு 10,000 ரூபாவை மாத்திரம் பெற்றுக் கொடுத்தால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண முடியுமா? மின்கட்டணமும் பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளது. அது தொடர்பில் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. செயற்படும் வீரனின் அரசாங்கம் செயற்திறன்  அற்ற அரசாங்கமாக பெயர் பெற்றுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வைத்தியர்கள் சிறந்த முறையில் செயற்பட்டனர். வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினருக்கு வைரஸ் தொற்றினால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் , எதற்கும் இராணுவத்தினரை முன்னிறுத்தி செயற்பட்டதனால் கடற்படையினரின் மூலம் வைரஸ் பரவல் ஆரம்பித்தது. தற்போது போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக புனர்வாழ்வு அளித்துவரும் கந்தக்காட்டு முகாமின் ஊடாக வைரஸ் பரவல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

மக்கள் ஏன் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவினதும் , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினதும் சொற்களுக்கு கட்டுப்படுவதில்லை. இதற்கு காரணம் அரசாங்கமே, அவர்கள் தொற்று நீக்க விதிகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டார்களா? அமரர் தொண்டமானின் மரண நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொற்றுநீக்க விதிகளை மீறி செயற்பட்டது போன்று , தேர்தல் பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் , இந்த சட்டவிதிகளை மீறிச் செயற்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

முழு நாட்டுக்குமே சிக்கலை ஏற்படுத்தியுள்ள இரசாங்கத்தினர் , பாதிப்படைந்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுக்காமல் இரக்கமின்றி செயற்பட்டு வருகின்றனர். இந்த அரசாங்கத்தை விரைவில் வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் மக்களின் உயிர் வாழுவதற்கான சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடுவார்கள். இந்நிலையில் ஜனாதிபதியின் பிடிவாத குணமிக்க ஆட்சிமுறைக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் தகுந்த பாடத்தை கற்பிக்க  வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13