அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் டிசம்பர் முதல் பெப்ரவரி வரை பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாது உள்ளது. உலக இருபதுக்கு 20 போட்டியை நடத்தும் சூழ்நிலையில் அவுஸ்திரேலியாவில் இல்லை.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி்யை மேற்கொண்டு வந்த நிலையில், மெல்போர்ன் நகரிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் அவுஸ்திரேலியா உடனடியாக நாட்டின் எல்லையை திறக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் 10 ஆவது பிக் பாஷ் டி20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் பிக் பாஷ் தொடர் சுமார் 60 நாட்களுக்கு மேல் நடக்கும். இதன் இறுதிப் போட்டி 2021 பெப்வரி 6 ஆம் திகதியன்று நடைபெறும்.

முதல் போட்டியில்  அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகளும் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் களம் இறங்குகின்றனர்.

அதேபோல் 59 நாட்கள் நடைபெறும் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணையையும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொடர் எதிர்வரும் அக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.