நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு 75531 பேர் கைது

Published By: Digital Desk 3

16 Jul, 2020 | 02:55 PM
image

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் கடந்த 39 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 75 ஆயிரத்து 531 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதற்கமைய கடந்த மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை ஆறு மணிமுதல் நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு 12 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத ஆயுதங்கள் , போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும், பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 17,301 சந்தேக நபர்களுள் 9,648 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 13 கிலோ 361 கிராம் 236 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா போதைப் பொருளுடன் 7,064 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 680 கிலோ 743 கிராம் 63 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் 589 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4 கிலோ 266 கிராம் 91 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 14,583 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 4 இலட்சத்து 68 ஆயிரத்து 184 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வெத்திருந்தமை தொடர்பில் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,ஆயுதங்கள் வைத்திருந்ததாக 154 பேரும் , வெடிமருந்துகளை வைத்திருந்ததாக 12 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 48 குழல் 12 ரக துப்பாக்கிகளும் , 29 உள்நாட்டு துப்பாக்கிகளும் , 74 ரிபிடர் ரக துப்பாக்கிகளும், 2 வேறுவகை துப்பாக்கிகளும், 5 கைத்துப்பாக்கிகளும் , 11 ரி 56 ரக துப்பாக்கிகளும் , ரி 81 ரக துப்பாக்கி ஒன்றும் , ரிவேல்டர் ரக துப்பாக்கிகள் இரண்டும் ,  838 தன்னியக்க தோட்டாக்களும் மற்றும் 7 வாள்களும் , 3 கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை  367 கிராம் தொகை வெடி மருந்து , 23 டெட்டனேட்டர்கள் மற்றும் 22 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 15,152 சந்தேக நபர்களும்,  வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்த 28,329 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதன் நோக்கிலே பொலிஸார் இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைய 39 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சுற்றிவளைப்புகளின் போது  75 ஆயிரத்து 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43