திருகோணமலையில் நேற்று மாலை (15.07.2020) ஐந்து மணியளவில் மீன்பிடித்து கரைதிரும்பிய ஜமாலியா பிரதேச மீனவர்களின் படகு மீது திருகோணமலை கரையோர காவல் படகு மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்ததுடன் படகு பலத்த சேதத்திற்கு உள்ளானது.

மேற்படி விபத்தில் படுகாயமடைந்த ஜமாலியா பிரதேச மீனவர் அப்துல் மஜீத் மௌஜூத் (வயது 40) என்பவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இருவர் நசார் நிப்ரஸ் (வயது 20), அன்வர் தஸ்லீம்(வயது20) நேற்று இரவு கரையோர காவல் படையினரால் துறைமுகப் பொலிஸார் வசம் ஒப்படைக்கபட்டுள்ளனர்.

இதையடுத்து தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணையை துறைமுகப்பொலிஸார் மேற்கொள்ளமை குறிப்பிடத்தக்கது.