லுணுகலை நகரில் ஐந்நூறு ரூபா போலி நாணயத்தாள் ஒன்றுடன் நபரொருவரை லுணுகலை பொலிசார் இன்று (16-07-2020) கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் லுணுகலை நகரில் வங்கியொன்றிற்கு சென்று பண வைப்பீடு செய்துள்ளார்.
அப்பணம் வங்கி கணக்கெடுப்பு இயந்திரத்திற்குள் போடப்பட்டதும் போலி ஐந்நூறு ரூபா நோட்டு கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து வங்கி உத்தியோகஸ்த்தர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் லுணுகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அவரிடமிருந்த போலி ஐந்நூறு ரூபா நோட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரை விசாரணையின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM